Wednesday 10 June 2009

'கெபாப்' எனும் எனக்கு எட்டிய கனி

எனக்கு இன்னும் மனதில் அச்சொட்டாய் இந்த விடயம் பதிந்து போய்க்கிடக்கிறது. 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் டெல்லிக்கு போயிருந்த பொழுது கெபாப் கடைகள் எங்கள் ஊரில் இருக்கும் தேத்தண்ணி கடைகள் மாதிரி றோட்டு றோட்டாய் இருந்தன. ஆனால் இலங்கையில் இருந்து போன எனக்கு அது ஒரு புதினமான சாப்பாடு ஆனால் அதனை வாங்கி சாப்பிட என்னிடம் ஒரு 10 ரூபா பணம் இருக்கவில்லை. என்னை கூட்டிக்கொண்டு போனவர்களிடமும் கேட்க எனக்கு மனமில்லை. இருந்த ஒரு மாதமும் அந்த கடைக்கு கிட்டபோய் நின்று கொண்டு அதன் வாசத்தை ஏக்கத்தோடு நுகர்ந்து விட்டு திரும்பியிருந்தேன்.

ஆனால் நான் லண்டன் வந்த பிறகு பார்த்தால் றோட்டு முழுக்க கெபாப் கடைகள்தானே. எனக்கு வலு சந்தோசம் இங்கு நாவூற மனதார சாப்பிட்டேன்.

இப்பொழுது குறைத்து விட்டேன். ஜி.பி சொல்லியிருக்கிறார் கொழுப்புணவை குறைக்க சொல்லி அதுதான்.

1 comment:

இளைய அப்துல்லாஹ் said...

நண்பரே,
கெபாப் பற்றியும் லண்டனில் களவெடுத்தவர் பற்றியும் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. இவ்வளவு வேலைப்பளுவிற்கும் இடையில் உங்களால் எழுத முடிந்திருக்கிறது. சிரிப்பை இலவசமாகத் தந்ததற்கு நன்றி.
அன்புடன்

அ.முத்துலிங்கம் கனடா

free counters

நண்பர்கள் கூட்டம்