Monday 27 July 2009

அறைதல் ( கவிதை)

பாய்ந்து வந்துமுகத்தில்
அறைகிறதுபனித்துளி
பொலிஸ்காரரின் சைரன் ஒலிகாதுக்குள் எரிகிறது
ஆணும் பெண்ணும்உதட்டை
உறுஞ்சி கடித்து எரிச்சலூட்டுகிறார்கள்
டயருக்கு செயின் பூட்டிபனிக்குள்
ஓடும் வாகனங்கள்கறிஸ் கறிஸ்
என்று சத்தமிட்டுகருவறுக்கின்றன
அதிகாலை என்றால்குயில்கள் கூவ வேண்டும்
குருவிகள்நெல் வயலுக்கள் குத்தி எழும்ப வேண்டும்
மெல்லிய தென்றல் முகத்தை வருட வேண்டும்
பெண்கள் குளித்து கோலம் போட வேண்டும்
முற்றத்தில் துளி நீர் தெளிக்க
பள்ளி வாசல் பாங்குகாதில் ஒலிக்க வேண்டும்
கறந்த பசும்பாலோடு சுட சுட
தேனீர் கலந்துஆவி பறக்க
குளித்த ஈர உடுப்போடு மனைவி
கொண்டு வந்து தர வேண்டும்
மெல்லமாய் சூரியன் மேலெளும்ப
வேண்டும்.
ச்சீ இதென்ன ……….

2 comments:

காலப் பறவை said...

:-))Nice

தீபிகா(Theepika) said...

காலைகளை மாத்திரமல்ல
காலங்களை...
கனவுகளை....
இன்னும் எல்லாம் தொலைத்து
விதியின் வழி அடைபட்டுப்போன
தமிழனின் வாழ்க்கை வலியின்
வரிகள்.
சத்தியம் கலந்த வார்த்தைகள்.
அருமை.

தீபிகா.

free counters

நண்பர்கள் கூட்டம்