Monday 22 June 2009

லண்டன் சிற்றி

லண்டனில் என்ன விசேசம் என்று 1996 ஆம் ஆண்டு அக்குறணையில் இருந்து லண்டனுக்கு வந்து திரும்பி வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ''அங்கு இரட்டை தட்டு பஸ் இருக்கு தம்பி'' என்று. இரட்டைத்தட்டு பஸ் என்ன இங்கு கண்டியிலும் ஒன்று இருக்குதானே அது கடுகண்ணாவை கடுகஸ் தோட்டை போறது. ஆனாலும் கண்டியில் இருக்கும் 4 வருடத்தில் ஒருமுறைதானும் ஏறவில்லை அதில். ஏனெனில் பயம். போய் வந்தவர்கள் சொன்னார்கள். மேல் கூரை ஆடுகிறது என்று கண்டியில் உள்ள சிங்கள றைவர்களை நம்பி நான் அதில் ஒருநாளும் ஏறவில்லை. அது மகியாவ பாலத்துக்கு கீழால் போகும் போது பார்த்திருக்கிறேன் கூரை இடித்து விடும் என்கின்ற பயம் எனக்கு பார்க்கும் போதெல்லாம் வரும். 1958 இல் இரட்டைதட்டு பஸ் இலங்கைக்கு வந்து விட்டது. 122 ஆம் நம்பர் போட்டுக்கொண்டு மகரகம அவிசாவளைதான் முதல் பயணம்.

ஆனால் கண்டியில் அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கும் ஒரே ஒரு இரட்டைத்தட்டு பஸ் அது.

பிறகு லண்டன் வந்தாப்பிறகு இரட்டைத்தட்டு பஸ்தான் எல்லாத்துக்கும் என்றாகி விட்டது. எல்லாம் புத்தம் புதிய பஸ்கள். கூரை விழும் என்ற பயம் கிஞ்சித்தும் இல்லை. அதில் ஏறி மேல் தட்டில் முன் சீற்றில் இருந்து போவது எனக்கு அலாதி விருப்பம். ஏதோ நான்தான் அதனை ஓட்டுவது போல இருக்கும்.(ஒரு முறை ஒரு மேம்பாலத்தால் திருப்பும் பொழுது கிங்ஸ்டனில் வைத்து பாலத்தில் இடித்துவிட கூரை தனியாக வந்து விட்டது)

குட்டி பிள்ளைகள் முன் சீற்றில் மேல்தட்டில் இருந்து டுர் டுர்...... என்று ஓட்டுங்கள். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

இரண்டு வருடத்துக்கு முந்தி லண்டனில் இருந்த டீசலில் ஓடும் இரட்டைதட்டு பழைய பஸ்களை முழுமையாக நிற்பாட்டி விட்டார்கள் சேவையில் இருந்து. அது பாதுகாப்பில்லையாம். கதவால் ஓடி ஏற முடியும். டீசல் புகை விடுகிறது. என்று சொல்லி நிற்பாட்டி போட்டார்கள்.இப்பொழுது எல்லாம் புதிய பஸ்கள் தான் வலு கலாதி. (இந்த வீடியோவையும் எனது மொபைல் போனில் இரட்டைத்தட்டு பஸ்ஸின் மேல் தட்டில் முன் சீட்டில் இருந்துதான் எடுத்தேன்)

லண்டன் சிற்றிக்குள்ளால் இரட்டைத்தட்டு பஸ்ஸில் பயணம் செய்வதே அழகான அனுபவம்தான்.

இப்பொழுதும் யாரும் என்னை கேட்டால் லண்டனில் என்ன இருக்கிறது என்று.

எனது பதில் இரட்டைத்தட்டு பஸ் தான்.

2 comments:

தமிழ்நதி said...

"கண்டியில் உள்ள சிங்கள றைவர்களை நம்பி நான் அதில் ஒருநாளும் ஏறவில்லை."

என்பதை வாசித்ததும் மேல்தட்டு தனியாகக் கழண்டு ஓடிப்போகும் எண்டு நினைச்சீங்களோ எண்டு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இலண்டனுக்கு வந்தபோதும் இரட்டைத் தட்டு பஸ் ஓடியதே... இப்போது தூக்கிவிட்டார்களா? வெளிநாடுகளில் அதுவும் இலண்டன் போன்ற நிலக்கீழ் புகையிரத வசதி கொண்ட நாடுகளில் காரே தேவையில்லைபோல் தோன்றும். இலண்டன் என்பது எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு ஒருவித பெருமிதத்தைத் தந்தது நினைவிருக்கிறதா? எல்லாம் வெள்ளைக்கார மிச்ச சொச்சப் பெருமைதானே...

இளைய அப்துல்லாஹ் said...

தமிழ்

வெள்ளைக்காரரை நினைத்தும் வீட்டில் தமிழ் பேசாமல் தவிர்த்தும் பெருமை பாராட்டும் தமிழர்களைத்தான் இன்னும் லண்டனில் பார்க்கிறோம். அந்த மனம் மாறப்போவதில்லை. இப்ப கயிறை இழுத்து பெல்லடித்து ஓட ஓட இறங்கிற பழைய பஸ் எல்லாம் தூக்கி போட்டினம் லண்டன் சிற்றியில். ஆனால் புத்தம்புதிய இரட்டைத்தட்டு பஸ்கள் கலக்கி கொண்டுதான் திரியுது. வாங்கோ லண்டனுக்கு.

free counters

நண்பர்கள் கூட்டம்