Tuesday 14 July 2009

நாய்கள்



நாக்கு சிவந்த நாய்க்குட்டி அது
எனக்கும் எல்லோருக்குமானது அது.
புலி போலவும் இருக்கும்
சில நேரம் நரி போலவும்
கொழும்பிலிருந்துலண்டனுக்கு
வந்திருந்தது அது.
விமானத்தில் இடம் பத்தாது என்று
கப்பலில் வந்தது அது.
ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்ததில்
நாக்கு இன்னும் நீண்டிருந்தது.
எச்சிலிலும் உப்பு இருந்தது
அதன் எச்சிலைஒருநாள்
எனது சின்ன மகள்
சுவைத்து விட்டு சொன்னாள்
ஜிம்மிக்கு உப்பு ஊறுகிறது என்று.
தனிய இருந்த எனக்குநாய்பூனை
பன்றிகளில் ஆர்வமில்லை
என்கொரு காதலி இருந்தாள்
அவளிடம் ஒரு நாய்க்குட்டி இருந்தது.
சிலோனும் லண்டனும்
நாயால் சேர்ந்திருந்தன.
ஒருநாய்இன்னொரு நாயை முத்தமிட்டது
நாக்கால் முத்தமிட்டதுவெள்ளைக்காரர் போல
எல்லா இடமும்நாக்கு பரந்திருந்தது நாய்க்கு
அதுதான் அவளுக்கும் பிடிக்கும்.
சிலோன் நாய்க்கு
ஒரு சிம்மாசனம்வேண்டுமென்று
மனைவி கேட்டாள்
எனது ஈஸி செயாரை
நாய்க்கான சிம்மாசனமாக்கினாள் மனைவி.
சிலோன் நாயும்
லண்டன் நாயும்
காதலிக்க தொடங்கி விட்டன.
நான் தரையில் படுத்திருக்கிறேன்.
மனைவியும் நாயும்
கட்டிலில்படுத்திருக்கின்றனர்
மனைவி உறங்கி விட்டாள்
குறட்டை சத்தம் மட்டும்
முழு அறையிலும்கேட்கிறது.
கொர் கொர் கொர்.....................

4 comments:

கே.பாலமுருகன் said...

//சிலோன் நாயும்
லண்டன் நாயும்
காதலிக்க தொடங்கி விட்டன//

என்ன நண்பரே, மனிதன் உணர்ந்துகொள்ள இது மனித காதல் இல்லையா? இந்தப் பதிவில் வரிகளெல்லாம் ஏதோ ஆக்கிரமிப்பையும் சுரண்டைலையும் குறியீடாக மாற்றுவது போல இருக்கிறதே?

குரும்பையூர் மூர்த்தி said...

//எனக்கும் எல்லோருக்குமானது அது//
உங்கள் கவிதை விளங்குவது போல இருக்கு ஆனால் விளங்கவில்லை...நிச்சயமாய் நாலுகால் நாய் பற்றியது மட்டும் இல்லை.
...சில லைட்டுகள் மெதுவாய் தான் பத்தும்....

சாந்தி நேசக்கரம் said...

மனிதர்மீது காட்டாத அன்பை நமது நாகரீக உலகு மிருகங்கள் மீது கொட்டிக்கொட்டிக் கொடுக்கிறது.அதுபோல அதிகாரங்களும் சுரண்டல்களும் இப்படியான குறியீடுகளால் உணர்த்தப்பட்டும் எதையும் இந்த இயந்திர உலகு ஏற்றுக் கொள்ளாமல் சுயநலத்தோடு ஓடுகிறது.

சாந்தி

இளைய அப்துல்லாஹ் said...

அன்பர்கள்

பாலமுருகன்,மூர்த்தி,சாந்தி நன்றி உங்கள் குறிப்புகளிற்கு

free counters

நண்பர்கள் கூட்டம்