Sunday 17 May 2009

(கவிதை) பிணங்களோடே வாழ்தல்

கருங்காக்கைகள் தொண்டை
அடைத்துப்போய் கிடக்கின்றன.
எத்தனை பிரேதங்களுக்கென்று
ஒப்பாரி வைப்பது
பிரேதம் செய்கிறது தேசம்.
தெருவில் வீட்டில்மதா கோவிலில்
பள்ளிவாசலில்
சூழ்ந்து கொண்டுள்ளபிரேதங்களின் குவியலில்
இடறுப்படுகின்றன காக்கைகள்


குஞ்சுகள் தொடர்பில் கவனமற்று
ஒற்றை வெளி மதிலில்
உட்கார்ந்து கொண்டேஅகவுகின்றன காக்கைகள்
புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய
பெண்ணுடலின் யோனிக்குள்
குண்டு வைத்து தகர்த்துப்போகிறான்ஒருவன்.

‘கேலி கேலி’யாக வெட்டிய
குழந்தையைகயிறில் தொங்கவிட்டுபோகிறான் மற்றொருவன்
வாய்க்குள் துப்பாக்கிவைத்து
சன்னம் பாய்ச்சி சிரிக்கிறான்இன்னொருவன்

பிரேதம்.வெட்டுதல் கூறுபோடுதல் எரித்தல் குதறுதல் புணர்தல் என்றெல்லாம்செய்து விட்டுஇறுதியில் பிரேதம் செய்கிறான்
தமிழிச்சிகள் தங்கள் யோனிகளைபாதுகாப்பு செய்யுங்கள்.
அல்லது அவர்களது குறிகளைஅறுப்பதற்கு கத்தி வைத்துக்கொண்டேபடுத்திருங்கள்
சிங்களச்சிப்பாய் அதோ வருகிறான் குறியோடு
கருங்காகங்கள் தொண்டைஅடைத்துப்போய்
அடுத்த திக்கு போகின்றன.
* கேலி கேலி - துண்டு துண்டாக (சிங்களச்சொல்) -


3 comments:

சாந்தி நேசக்கரம் said...

வார்த்தைகளுக்குள் வலியும் , பயமும் அப்பிக் கிடக்கிறது. முடிவில்லாத் தொடராக தமிழ் இரத்தம் எல்லோரின் பலியெடுப்புக்காகவும்.

சாந்தி

இளைய அப்துல்லாஹ் said...

அடுத்தது என்ன?

சாந்தி நேசக்கரம் said...

அடுத்தது கனவுகள் விடுத்து எஞ்சியவர்களை உயிருடன் மீட்பதற்கான தீர்வும் , நிரந்தர அமைதியும் தமிழர்களுக்கான சமாதானத் தீர்வும்.

கனவுகண்ட தேசமும் நாங்கள் நம்பியவர்களும் வஞ்சம் அல்லது வல்லமையால் அறுபட்ட கொடுமைக்குப் பின்னும் கனவுகளை விடுத்து காலத்தோடு ஓடுவதுதான் தீர்வு.

சாந்தி

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive