Monday 4 May 2009

கவிதை அபகரிப்பு

அபகரிப்பு

தலை குனிந்தபடி நடக்கிறேன்
என்னைச்சுற்றிலும் ஒலிகள்
மனித அழுத்தங்களை
இறுக மூடிய படிக்குசுதந்திரமாக
என்னை நடக்க விடுங்கள்

என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
தொந்தரவு செய்வதற்கென்றே வருகிறார்கள்
ஒரு நிமிடமும் என்னைத்தனிமையில்ஏகாந்தமாய்

என் மனதோடும்அந்தரங்கங்களோடும்
இருக்க விடுகிறார்களில்லை
மௌனம் எனது மொழியாய் இருக்கையில்

தொந்தரவு அவர்கள் மொழிகளாய் இருக்கின்றன
ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?

அல்லாஹ்வே இவர்களைச்சபியும்
என்னை தொந்தரவாளர்களிலிருந்து இரட்சியும்
அழுத்தங்களற்ற
ஒழுங்கான சுதந்திரமானபூமியொன்றை
நோக்கியபயணத்தில்
என்னைநோக்கியபடிக்கு பயணிக்க விடுங்கள்

இளைய அப்துல்லாஹ்

5 comments:

arolara said...

Im really happy atlast you started the blog ,you deserved it bcos you are a creative man

றஞ்சினி said...

/ஒரு நிமிடமும் என்னைத்தனிமையில்ஏகாந்தமாய்
என் மனதோடும்அந்தரங்கங்களோடும்

உண்மையாக உணர்ந்திருக்கிறாய்....

நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு வாழ்த்துக்கழ்.

Unknown said...

மௌனம் எனது மொழியாய் இருக்கையில்
தொந்தரவு அவர்கள் மொழிகளாய் இருக்கின்றன
ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்?
அல்லாஹ்வே இவர்களைச்சபியும்
என்னை தொந்தரவாளர்களிலிருந்து இரட்சியும்
அழுத்தங்களற்ற
ஒழுங்கான சுதந்திரமானபூமியொன்றை
நோக்கியபயணத்தில்
என்னைநோக்கியபடிக்கு பயணிக்க விடுங்கள்

அருமை. அற்புதமான வரிகள். மனதை இளக்கும் கவித்துவம்.

வாழ்த்துக்கள்

ராகவன் தம்பி

லட்சு said...

தோழர் பாமரன் மூலமாக தங்களின் பிணம் செய்யும் தேசம் கவிதை தொகுப்பை அறிந்தேன் தற்போது வலைப்பூவில் அபகரிப்பை படிக்கிறேன்
பாரிய வித்தியாசங்கள் வாழ்த்துக்கள்

இளைய அப்துல்லாஹ் said...

அன்பான அருண், ரஞ்சனி ,ராகவன்தம்பி ,லட்சு எல்லோருக்கும் எனது அன்பு என்றும் இருக்கும்

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive